×

அரசு மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை

மாதவரம், ஏப்.17: தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி இ.பி காலனியை சேர்ந்த விஜயன் மகன் தினேஷ்குமார்( 29). இவர் சென்னையில் தங்கி, மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்.டி., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக, மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்துள்ளார். இதனிடையே, கல்லூரி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தினேஷ்குமார், வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். மேலும், அவர் மனஅழுத்த பிரச்னைக்காக, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். பின்னர், வீட்டில் இருந்தவர்களிடம், தான் சில நாட்களாக தொடர் மன உளைச்சலில் இருந்ததால் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் இறந்தார். இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Government Medical College ,Madhavaram ,Dinesh Kumar ,Vijayan ,Ilakyampatti EP Colony, Dharmapuri district ,Chennai ,Madras Medical College ,
× RELATED ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி,...