×

போக்சோ குற்றவாளி லாரி டிரைவருக்கு 28 ஆண்டு சிறை: இரிஞ்ஞாலக்குடா அதிவிரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாலக்காடு, ஏப்.16: இரிஞ்ஞாலக்குடா அருகே போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் தண்டைனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடா அடுத்த பெரிஞ்ஞனம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாயுஜி (31). லாரி டிரைவர். இவர் வீட்டின் அருகே கூலித்தொழிலாளி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய மகள் உள்ளார். இந்த தம்பதியினர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஷாயுஜி அத்துமீறி புகுந்து 18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் வலப்பாடு காவல் நிலையத்தில் ஷாயுஜி மீது புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாயுஜியை கைது செய்து திருச்சூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு இரிஞ்ஞாலக்குடா அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் ஷாயுஜிவுக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் இரிஞ்ஞாலக்குடா அதிவிரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சேதுமோகன் தீர்ப்பு வழங்கினார். இந்த அபராத தொகை ரூ.1 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : POCSO ,Irinjalakuda ,Palakkad ,Shayuji ,Perinjanam ,Thrissur district ,Kerala ,
× RELATED ஐயப்பன் கோயிலில் விசு கனி உற்சவம்