×

நடிகைகளின் கணவர்கள் பார்த்தால்? ஊர்வசி விளாசல்

தற்போதைய நடிகைகளை கடுமையாக சாடியிருக்கிறார் ஊர்வசி. சமீபத்தில் அவரளித்த பேட்டியில், ‘‘திரையில் கதாநாயகி அரைகுறையான ஆடையணிந்து சுற்றிலும் பல நடனக் கலைஞர்களுடன் நடனமாட, கதாநாயகனும் அவருடன் சேர்ந்து ஆடுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகையின் கணவருக்கு எப்படிப்பட்ட உணர்வு தோன்றும். தன்னுடைய மனைவி இப்படி அரைகுறையாக ஆடுகிறாளே என்ற எண்ணம் ஏற்படுமா?

ஏற்படாதா? சாதாரண வாழ்க்கையில் ஒரு கணவன் தன்னுடைய மனைவியுடன் வெளியில் செல்லும்போது அவளது ஆடை கொஞ்சம் விலகிவிட்டாலே அந்த புருஷன் எவ்வளவு கோப்ப்படுவார், ஆனால் சினிமாவில் அந்த எண்ணம் சிலருக்கு வரவே வராது என்பதும் உண்மைதான். சினிமா என்பது தற்போது வியாபாரத்தை மட்டுமே சார்ந்துள்ளது. கவர்ச்சி என்பது தற்போதைய சூழலில் பெரிய விஷயமாக இல்லை’’ என்றார்.

Tags : Urvashi Vlasal ,Urvashi ,
× RELATED ஜனநாயகன் விமர்சனம்…