எழுத்தாளர்கள் சங்க தலைவர் ஆனார் சேரன்

 

சென்னை: மறைந்த இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைவராக பதவி வகித்து வந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. வரும் 2026-2029ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகரன் வழிகாட்டுதலில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியும், இயக்குனர் சேரன் தலைமையில் நம்ம கே.பாக்யராஜ் அணியும் போட்டியிட்டன.

முக்கிய பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர் ஆகிய பதவிகளை சேரன் அணி கைப்பற்றியது. தலைவராக சேரன், துணை தலைவர்களாக சமுத்திரக்கனி, சினேகன் மற்றும் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 21 இடங்களில் சேரன் தலைமையிலான நம்ம கே.பாக்யராஜ் அணி 10 இடங்களையும், வி.சி.குகநாதன் தலைமையில் போட்டியிட்ட திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி 11 இடங்களையும் வென்றன.

Related Stories: