
சென்னை: சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனும் தலைப்பில் வெளியானது. கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், படத்தின் ரிலீசுக்கு முன்பு பி சென்டர் தியேட்டர் ஓனர் ஒருவரிடம் தனது தோழியை வைத்து மீடியா நபர் போல் பேச வைத்தாராம் சமந்தா. ‘‘படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்?’’ என அந்த தோழி கேட்டதற்கு, ‘‘ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவாங்க?. அது பெரிய ஹீரோ படம் என்றால் பரவாயில்லை, அவர் கவர்ச்சி தான் மக்களுக்கு தெரியும்.
ஆனால் அவர் படம் நடித்தால் யார் வருவாங்க?’’ என கூறினாராம். அவர் பேசுவதை சமந்தாவும் கேட்டுக்கொண்டிருந்தாராம். ஆனால், தற்போது படம் ரிலீஸ் ஆகி ரூ.100 கோடி வசூலித்துள்ள நிலையில், தியேட்டர் அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா. இனிமேல் பி மற்றும் சி சென்டர்களில் ஹீரோயின் படங்கள் பற்றி கேட்டால் ‘No’ சொல்லகூடாது, ‘Let’s see’ என்று சொல்ல வேண்டும் என அதிரடியாக சமந்தா கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

