என் புருஷனை விட உங்களைதான் பிடிக்கும்; ரசிகையின் பேச்சுக்கு ஷாருக்கான் பதிலடி: சோஷியல் மீடியாவில் குவியும் பாராட்டு

மங்களூரு: இந்திய திரையுலகின் உச்ச நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.

உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான்.

இதேபோல சில மாதங்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தின் போது பெண் ஒருவர் ‘எனக்கு என் கணவரை விட விஜய்யை தான் மிகவும் பிடிக்கும்’ என்று பேசினார். அதற்கு விஜய் மவுனம் காத்தார் சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால் ஷாருக்கானின் இந்த அறிவுப்பூர்வமான பேச்சும், அறிவுரையும் அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Stories: