×

பாகுபலியை தெரியுமா?

இயக்குனர் புரி ஜெகன்னாத், பாங்காக் சென்றிருந்தார். அப்போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனது ஓட்டலுக்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த நர்ஸ், புரி ஜெகன்னாத், இந்திய திரைப்பட இயக்குனர் என தெரிந்ததும், உடனே உங்களுக்கு பாகுபலியை (பிரபாஸ்) தெரியுமா என கேட்டிருக்கிறார். புரி ஜெகன்னாத் சிரித்துக்கொண்டே, அவருடன் எடுத்த புகைப்படங்களை காட்டியிருக்கிறார்.

அதை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் சென்று அந்த நர்ஸ் காட்டியிருக்கிறார். வந்திருப்பது பிரபாசின் நெருங்கி நண்பர் என தெரிந்து கொண்டதும், மருத்துவமனையே அவருக்கு ராஜ உபசரிப்பை கொடுத்து, அவசர அவசரமாக ட்ரீட்மென்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். இது பற்றி சமீபத்தில் பிரபாஸுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் புரி ஜெகன்னாத் தெரியப்படுத்தியுள்ளார். அந்த மெசேஜை ராஜமவுலிக்கு பார்வர்ட் செய்திருக்கிறார் பிரபாஸ்.

Tags : Baahubali ,Puri Jagannath ,Bangkok ,Prabhas ,
× RELATED நள்ளிரவில் நடந்த அராஜகம் நடிகைக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை