தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா வசூலை கோடிகளில் எகிற வைத்துக் காட்டும் போக்கு ‘பாகுபலி’க்குப் பிறகு தான் தீவிரமடைந்தது. அன்றிலிருந்து பிரம்மாண்ட எண்களைக் காட்ட வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் வசூல் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு வசூல் செய்துள்ளது என்று மிகைப்படுத்தப்பட்ட போஸ்டர்கள் வெளியிடப்படுவது, சம்பந்தப்பட்ட ஹீரோக்களை பெருமைப்படுத்தவும், ரசிகர்களின் திருப்திக்காக மட்டும்தான்” என்று தெரிவித்துள்ளார்.
