×

சாய் பல்லவி மறுத்ததால் சமந்தாவுக்கு வாய்ப்பு

தெலுங்கில் சமந்தா தயாரித்து நடித்த ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கடந்த 1980களின் பின்னணியில் முழுநீள ஃபேமிலி சென்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இதில், அமைதியான மருமகளாகவும், அதே நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் அதிரடி பெண்ணாகவும் சமந்தா நடித்துள்ளார்.

வரும் 19ம் தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்து ரசிகர்களுடன் பேசிய அவர் கூறுகையில், ‘முதலில் சாய் பல்லவியிடம் கேட்டபோது, சில படங்களில் அவர் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார். பிறகு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தவுடன், கேரக்டருக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. நான் நடிக்க ஆரம்பித்த பிறகு கேரக்டர் கூடுதலாக மெருகேறியது. எனது இந்த முயற்சி ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Tags : Chai Pallavi ,Samantha ,Nandini Reddy ,Santosh Narayan ,
× RELATED காக்டெயில் 2வில் நடிக்க பயந்தேன்: ராஷ்மிகா