
கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷின் 55வது படத்தில் நடிக்கும் அவர், இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்துள்ளார். அந்தந்த மொழிகளில் நடிக்கும்போது, அந்தந்த மொழியில் பேசுவதுதான் மண்ணுக்கும், மக்களுக்கும் கொடுக்கும் மரியாதை என்றும், அது ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நான் ஒரு பன்மொழி நடிகை என்பதால், ஒவ்வொரு மொழியையும் பெரிதும் மதிக்கிறேன். நான் பல்வேறு மொழிகளில் நடிக்கிறேன். ஒரு இடத்துக்கு செல்லும்போது, அங்கு மேடையில் இருந்தால், கண்டிப்பாக அந்த மாநில மொழியில் பேச முயற்சிக்கிறேன். அதுதான் நான் அந்த மண்ணுக்கும், அவர்களின் மொழிக்கும் கொடுக்கும் உண்மையான மரியாதை’ என்றார்.

