×

சைக்கலாஜிக்கல் திரில்லரில் அபிநயா

 

சென்னை: அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படத்தில் அம்மாவாக அபிநயா நடித்திருக்கிறார்.

இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன், மற்றும் ஹரிஹரன் இணை தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது. சிவானி ஸ்டுடியோ நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. வசனம் – பால பாரதி. ஒளிப்பதிவு – முகமது அமீன் இசை – ஜிகேவி.

Tags : Abhinaya ,Chennai ,Jagadish ,
× RELATED ருக்மணி வசந்தின் போலி பிகினி படங்களை வெளியிட்ட 2 பேர் சிக்கினர்