×

28 வருடங்​களுக்​கு பிறகு மீண்டும் நாகார்ஜூனாவுடன் நடிக்கும் தபு

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்​ஜூனா​வின் 100வது படத்தை அவருடைய அன்​னபூர்ணா ஸ்டுடியோஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்​கிறது. தமிழில் வெளியான ‘நித்​தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரி​யா’ ஆகிய படங்​களை எழுதி இயக்​கிய ரா.​கார்த்​திக், இப்படத்துக்கு மிகவும் வித்தியாசமான திரைக்கதை அமைத்து எழுதி இயக்​கு​கிறார். முக்​கிய வேடத்​தில் தபு நடிக்கிறார். அவரும், நாகார்ஜூனாவும் 28 வருடங்​களுக்​கு பிறகு மீண்​டும் இணைந்து நடிக்கின்​றனர். கடந்த 1996ல் அவர்கள் நடித்து வெளி​யான ‘நின்னே பெல்​லாட​டா’ என்ற தெலுங்கு ​படம் மிகப்பெரிய வெற்​றி​பெற்றது. கடைசி​யாக 1998ல் வெளி​யான ‘ஆவிடா மா ஆவிடே’ என்ற படத்​தில் அவர்கள் நடித்​திருந்​தனர்​. தற்போது 28 வருடங்களுக்கு பிறகு மீண்​டும் அவர்கள் இணைந்து நடிக்​கின்​றனர். பெயர் சூட்டப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்​பிடிப்பு ஐத​ரா​பாத்​தில் தொடங்​கி​யது. இதில் தனது சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பதற்காக ஐதராபாத் வந்துள்ள தபு, அதுகுறித்து தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

Tags : Tabu ,Nagarjuna ,Hyderabad ,Annapurna Studios ,Ra. Karthik ,
× RELATED கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி