மோகன்லால், மீரா ஜாஸ்மினின் ‘அதி மனோகரம்’

கடந்த ஆண்டு மலையாளத்தில் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘துடரும்’ (தமிழில் ‘தொடரும்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது) என்ற படம் ஹிட்டாகி, 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. தற்போது மீண்டும் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

இது அவரது 366வது படமாகும். ‘லவ் லாஜன்’ என்ற வித்தியாசமான பெயர் கொண்ட, சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் நடிக்க, ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். சித்திரை விஷுவை முன்னிட்டு, ‘அதி மனோகரம்’ என்ற தலைப்பை மோகன்லால் வெளியிட்டார்.

Related Stories: