ராம் சரணுக்கு சிரஞ்சீவி சொன்ன தத்துவம்

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம் சரண், தனது வாழ்க்கையில் ஐயப்ப விரதம் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் தனது தந்தை சிரஞ்சீவி கற்றுக்கொடுத்த பாடம் குறித்து விரிவாக பேசியுள்ளார். ‘எனது தந்தையின் அறிவுரைப்படி 17 வயதிலேயே ஐயப்ப விரதத்தை தொடங்கினேன். எனது எண்ணங்களை கட்டுப்படுத்தவும், மனம் அமைதி பெறவும், வாழ்வியல் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் ஐயப்ப விரதம் எனக்கு பெரிதும் உதவியது. ‘மற்றவர்கள் 50 மணி நேரம் உழைத்தால், நீ மட்டும் 100 மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்பதே தந்தை கற்றுக்கொடுத்த உழைப்பின் தத்துவமாகும்.

நடிகராக இருப்பதை விட, பொறுப்புள்ள தந்தையாக இருப்பதற்கே அதிக முன்னுரிமை தருகிறேன். எனது வாரிசுகள் யாருக்கும், எதற்கும் பயப்படாமல் அதிக தைரியத்துடனும், துணிச்சலுடனும் வளர வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்ற அவர், ஜான்வி கபூருடன் இணைந்து புச்சி பாபு சனா இயக்கத்தில் நடித்துள்ள ‘பெத்தி’ என்ற படம், வரும் ஜூன் மாதம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்ததை சுட்டிக்காட்டி, தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.

Related Stories: