×

ரீல்ஸ் வெறி முத்திப்போன பயந்தாங்கோலி அரசுங்க இது..! என்னோட அரெஸ்ட்ட காமெடியா தான் பாக்குறேன்..

சென்னை: காவிரி விவகாரத்தை திசை திருப்பவே ஆளும் அரசு என் மீது கைது நடவடிக்கையை எடுத்துள்ளது, இதை நான் காமெடியாகவே பார்க்கிறேன் என காவல்துறையினரால் வாகனத்தில் விசராணைக்கு அழைத்து செல்லப்படும் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி பிரச்சனையை மடைமாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் பேசாதத்தை பேசியதாக பொய் பிரச்சாரத்தில் தவெக அரசு ஈடுபட்டுள்ளது. கட்சி துவக்கிய ஒன்றரை ஆண்டுகளில் வெறும் கட், காபி, பேஸ்ட் மட்டுமே தவெக செய்து வருகிறது.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை. மேகதாது, காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுக்காத இந்த பயந்தாங்கோலி அரசைக் கண்டித்து தஞ்சாவூர் போராட்டத்தில் பேசினேன். ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ள தவெக அரசின் அமைச்சர்களைக் கண்டித்துப் பேசினேன். அதற்காக இன்று நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பண்ணி பொய் செய்தியை பரப்பி அதற்காக கைது செய்துள்ளார்கள். கைதுக்கு பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. முத்தமிழறிஞர் கலைஞரின் வளர்ப்பு, தலைவர் மு.க.ஸ்டாலினின் வளர்ப்பு. நான் மட்டுமில்லை, திமுக-வின் கடைசித் தொண்டர் வரை ஒருவரும் பயப்படமாட்டார்கள் என்று சிரித்த முகத்துடன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Tags : Chennai ,Khaviri ,Udayaniti Stalin ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் மீது 12 மணி வரை கைது...