×

டீ நல்லா இல்லை என கூறிய சிறுவனை தாக்கிய 2 பேர் கைது

 

சேலம், ஆக.3: சேலம் சின்னகொல்லப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கவிதா (36), இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் நேற்று முன்தினம் இரவு, டீ குடித்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து சென்றான். அப்போது சின்னகொல்லப்பட்டி சட்டக்கல்லூரி அருகே, கவிதாவின் மகன் ரத்த காயத்துடன் இருந்தார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கவிதா தன் மகனிடம் விசாரித்தார். அப்போது, தான் காபி பாரில் டீ நல்லா இல்லை என்று கூறினேன்.

அப்ேபாது பெரியகொல்லப்பட்டி, கன்னங்குறிச்சியை சேர்ந்த சிலர், என்னிடம் தகராறில் செய்து, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என தெரிவித்தார். இது குறித்து, கவிதா அளித்த புகாரின் பேரில், கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த சிவா(23) மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

 

Tags : Salem ,Kavita ,Anna Nagar, Chinnakollapatti, Salem ,Chinnakollapatti Law College ,
× RELATED டூவீலர் திருடிய ெதாழிலாளி கைது