×

லாக்அப் டெத்-ஐ தடுக்க முடிலனா காவல்துறைய கூட தனியார் மயமாக்கிடுவீங்களா.!! தவெக அரசுக்கு கேள்வி

சென்னை: மதுபான விற்பனயில் முறைகேட்டை தடுக்க முடியவில்லை என்பதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

என்ன ஒரு புத்திசாலித்தனமான முடிவு இது.! மதுவே இருக்க கூடாது என்று தான் 717 கடைகளை நாங்கள் மூடுகிறோம் என அரசாணை வெளியிட்டு மக்களை ஏமாற்றினார்கள். இப்போது முறைகேட்டை தடுக்க இயலாமல், தனியார் மயமாக்க முடிவெடுக்கிறார்கள். அதே போல லாக்அப் டெத் மரணங்களை தடுக்க முடியவில்லை என்று காவத்துறையை தனியார் மயமாக்கி விடுவார்களா?

அரசு மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என்றல் அதையும் தனியார் மயமாக்கி விடுவீர்களா? அதே போல போக்குவரத்து துறையிலே நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என்று சொன்னால் அதையும் தனியார் மயமாக்கி விடுவீர்களா? எங்கே தான் போகிறது தமிழகம்? நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாமல் அல்லது தெரியாமல் தவெக அரசு தடுமாறுவதை பார்க்கும் மக்கள் மனதில் இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த அரசு நீடிக்கும் என்று எண்ணம் எழுவதை பார்க்க முடிகிறது என்று ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

Tags : Chennai ,Former Minister ,R. B. Udayakumar ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர்...