இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 9 மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தமிழக பாஜ வலியுறுத்தல்

 

சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 9 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக பாஜ வலியுறுத்தியுள்ளது. தமிழக பாஜ மாநிலச் செயலாளர் சதீஷ் குமார் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் கடந்த 22ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலத்தீனரார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்போலா, சவரி வினோதின், தேவசகாயம், இன்பெண்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவிக்கவும், அவர்களது உடைமைகளையும் மீட்டு தரவும் வேண்டுகிறேன்.

 

Related Stories: