சீர்காழி அருகே காவிரி கரையில் பனை விதைகள் நடும் பணி

சீர்காழி : சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் காவிரி கரையில் 100க்கு மேற்பட்ட பனை விதைகள் நடும் பணி நடந்தது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் கடைசியாக வந்து கலக்கும் காவிரியின் கரைகளை பலப்படுத்தும் விதமாக பல ஆண்டுகளாக பூம்புகார் பனை அறக்கட்டளையாது பல்வேறு பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கீழப்பெரும்பள்ளம் காவிரி ஆற்றங்கரையில் பூம்புகார் பனை அறக்கட்டளை சார்பில் 100 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேலபெரும்பள்ளம் பிரேம பாலன், கீழப்பெரும்பள்ளம் ஆசிரியர் முத்து, அகிலன் ,வாசு, பாஸ்கரன் மற்றும் பூம்புகார் பனை அறக்கட்டளையின் சிவசுப்பிரமணியன் ஆசிரியர் சேரலாதன் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பூம்புகார் பனை அறக்கட்டளை நிறுவனர், உதவி பேராசிரியர் டாக்டர் ரவீந்திரன் செய்திருந்தார்.

Related Stories: