×

செட்டிகுளத்தில் மது விற்றவர் கைது

 

பாடாலூர், ஜூலை 27: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் போலீசார்கள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வேம்புடையான் மகன் சுப்ரமணியன் (47) என்பவரை பிடித்தனர்.

சோதனையில் அவர், அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி விற்று வந்தது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Chettikulam ,Patalur ,Patalur police ,Alathur taluka ,Perambalur district ,SI Chandrasekar ,
× RELATED 4 பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்:...