ராகுல்காந்தியை கண்டித்து சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 

சென்னை: ராகுல்காந்தியை கண்டித்து சென்னையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு சுமூகமாக நடந்து முடிந்து ரிசல்ட் வெளிவந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏன் பதவி விலக வேண்டும்?. மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸின் ராகுல்காந்திக்கு என்ன சம்பந்தம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் ராகுல்காந்தியை கண்டித்து தமிழக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று நயினார் நாகேந்திரன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர்ஸ் அருகில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, டால்பின்தர், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார், ஜான் பீட்டர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் சுயநல அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியை கண்டிக்கிறோம்.

பிரதமர் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியை கண்டிக்கிறோம். தேசத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ் கட்சியை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பினர். பாஜகவினர் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடுவதை தவிர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தை சுற்றி போலீசார் பேரிகார்டுகளை போட்டு தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: