- ஒன்றிய மாநிலம்
- பல்லடம்
- நேவர்ஸ் கூட்டுறவு சங்கம்
- கணபதப்பள்ளிகள்
- உதவி இயக்குனர்
- மாவட்ட துணி துறை
- கவிதா தலைவர்
பல்லடம், ஜூலை 23: பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் நெசவாளர்களுக்கு ஒன்றிய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்தார். நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் புகழேந்தி முன்னிலை வகித்தார். இதில், கணபதிபாளையம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நெசவாளர்கள் 120 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதிபாளையம் சொக்கப்பன், சங்க மேலாளர் பன்னீர்செல்வம், வெங்கடாசலம், திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
