- தவெகா எம். எல்.
- Icourt
- சென்னை
- உத்தங்கரி தவேகா
- சென்னை உயர் நீதிமன்றம்
- திருவண்ணாமலை தொகுதி திமுக
- மீ.
- வேலு
- பெருதுரா பிளாக்
சென்னை: தேர்தல் வழக்கு கோரிக்கையில் வேறு ஒருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளதால் தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எஸ்.ஜெயக்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கே.சிவக்குமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. ஆர்.செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா தரப்பில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு கோரிக்கையில் தனது பெயருக்கு பதிலாக கோவிந்தராஜன் என்பவர் பெயர் இடம் பெற்றுள்ளதால் இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, வழக்கின் கோரிக்கையில் எம்.எல்.ஏ.வின் பெயருக்கு பதிலாக வேறு ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, ஜூலை 28ம் தேதிக்குள் திருத்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் மனு நிராகரிக்கப்படும் என்று மனுதாரர் கீதா தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மற்ற தேர்தல் வழக்குகளில் சிலருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து வழக்குகளையும் ஜூலை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
