×

கபிஸ்தலத்தில் இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் : கபிஸ்தலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சியில் அரசலாற்று படுகைப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் 25 குடும்பங்களை சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை குடியிருப்பு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு இருளர் சாதி சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை.

கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாமல் இப்பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த கிராமத்துக்கு கலெக்டர் வந்து ஆய்வு மேற்கொண்டு 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும். சாதிச்சான்று, சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர்வ சதி உட்பட அனைத்து அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

மேலும், இந்த பகுதி மக்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு இதுநாள் வரை கட்டிக் கொடுக்கப்படவில்லை. எனவே இந்த கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Kapisthalam ,Thanjavur ,Arasalatru Padukai ,Papanasam taluka ,
× RELATED சீர்காழியில் முதியவரை ஈவு...