திருவாரூர்: திருவாரூர் பைபாஸ் சாலை வாளவாய்க்கால் அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில், அந்த காரில் 9 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்ததும், காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு கடத்தி செல்வதும், காரை ஓட்டி வந்தது நெடுவாக்கட்டையை சேர்ந்த குமார் (35), அவரது உறவினரான அருண்குமார் (39) மற்றும் இவர்களுக்கு உடந்தையாக பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் கார்த்திகேயன் (40) என தெரிய வந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து ஏட்டு உள்பட 3 பேரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
