×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக சுவாமியை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. மேலும் நாளையும் (சனி) நாளை மறுதினமும் (ஞாயிறு) விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்களின் வருகை மேலும் அதிரிக்கும் என தெரிகிறது. பக்தர்கள் அதிகளவு வந்திருப்பதால் தங்கும் அறைகள் கிடைக்காமல் கோயில் எதிரே உள்ள பந்தல்களிலும் வெட்ட வெளியிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு அன்னப்பிரசாதம் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று 63,556 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35,900 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.5.31 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.12 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.55 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் கோகர்பம் அணை வளைவு வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 30 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupathi Eumamalaiaan Temple ,Swami ,Tirupathi Elumalayan Temple ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப்...