×

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? – பிசிசிஐ அதிரடி முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா (26, 11 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகள் பலமடைந்துள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, 39 வயதான ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கூடுதல் வாய்ப்பளிக்க பிசிசிஐ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை 19 அன்று நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியே ரோஹித்தின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேர்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இங்கிலாந்து தொடருக்குப் பிறகு தங்களின் எதிர்காலத் திட்டங்களில் ரோஹித் இல்லை என்பதைத் தேர்வுக் குழுவினர் அவரிடம் தெரிவித்துவிட்டதாகவும், இதனால் ரோஹித் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விராட் கோலியின் ஃபார்ம் மற்றும் உடற்தகுதி காரணமாக அவர் அணியில் தொடர்வதில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், அஜித் அகர்கரும் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. ஆனால், ரோஹித் சர்மா விஷயத்தில் அடுத்த தலைமுறை வீரரான ஜெய்ஸ்வாலுக்கு வழிவிட வேண்டும் என்பதில் பிசிசிஐ தெளிவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது ஓய்வு குறித்த இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு ரோஹித் சர்மவிடமே விடப்பட்டுள்ளது.

Tags : Rohit Sharma ,BCCI ,England ,ODI World Cup ,
× RELATED நீட் யூஜி மறுதேர்வு முடிவுகள் 2026 வெளியீடு: 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!