சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக சஸ்பெண்ட்: ஆணையர் சமீரன் உத்தரவு!

சென்னை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம், வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல், பொதுப்பணத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்களின் அடிப்படையில் நான்கு மூத்த அதிகாரிகள் உட்பட ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யபட்டிருக்கிறார்கள்.குறிப்பாக இவர்களின் நான்கு பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகரட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக ரூ.9 லட்சத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலி பில் சமர்ப்பித்ததாக குற்றத்திற்காக ஜூலை 9ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் . அதே போல மூத்த பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ஒருவரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியப் குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் கட்டட உரிமையாளரிடம் ரூ.2.5 லட்சம் லஞ்சம் கேட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாலைப் பணியாளர்ரான பாஸ்கர் உரிய அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளரை மிரட்டி ரூ.50,000 லஞ்சம் வாங்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பில் கிளர்க்கான துர்கா மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் ராயபுரம் மண்டலத்தில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக இது போன்ற புகார்களில் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்படும் நிலையில், இம்முறை முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் அல்லது சட்டவிரோத ஆதாயங்களைக் கோரினால், பொதுமக்கள் தன்னிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: