- குட்கா
- ராஜபாளையம்
- தென் காவல் நிலையம்
- சப்-இன்ஸ்பெக்டர்
- செல்வம்
- தமிழ்நாடு அரசு
- அய்யனார் கோயில் சாலை
- இராஜபாளையம்...
ராஜபாளையம், ஜூலை 16: ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் போலீசாருடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சம்மந்தமாக ராஜபாளையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ராஜபாளையம் அய்யனார் கோவில் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கணேசன்(52) என்பவரை பிடித்து அவரிடமிருந்து சுமார் 4.20 கிராம் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். அவரை வழக்கு பதிந்து கைது செய்தனர்
