×

நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி.

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதலமைச்சர் விஜய் இதுவரை எதுவும் பேசாதது ஏன்? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;
நாகர்கோவில் கிளை சிறையில் காவல்துறையினரின் வன்முறையால் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

இந்த காவல் மரணம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்த பின்னும், முதலமைச்சர் அவர்களிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அறிக்கையோ இன்னும் வரவில்லை. எந்தவொரு அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டிருக்கும் அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கூட இந்த அரசு முன்வரவில்லை. மொத்தத்தில், எப்போதும் போல இப்பிரச்சனையிலும் பொறுப்பேற்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Kanimozhi M.S. ,Sabarivarman ,Nagarko ,Kanyungullah M. B. ,Chief Minister ,Vijay ,
× RELATED தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு..!