கப்பல் மாலுமி மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த வழக்கறிஞர்: போக்சோ பாய்ந்தது

 

வீடியோவை காட்டி ரூ.25 லட்சம் பறிப்பு

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(38) கப்பல் மாலுமி. இவருக்கும், கடலூர் மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்விக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது. 4 மாதம் கப்பலிலும், 4 மாதம் ஓய்விலும் இருக்கும் அருண்குமார், அந்த 4 மாதமும் கடலூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். தமிழ்செல்வி, மஞ்சக்குப்பத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில் தவெகவை சேர்ந்த கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சிவகுரு (33)என்பவர் தமிழ்செல்வியின் பியூட்டி பார்லருக்கு சென்று அவரோடு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இன்ஸ்டாவில் பெண்ணின் ஐடி போல போலியான ஐடியை உருவாக்கி, தமிழ்ச்செல்வி பற்றி அருண்குமாரிடம் தவறாகவும், அருண்குமார் பற்றி தமிழ்செல்வியிடம் தவறாகவும் சிவகுரு பேசி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிவகுரு, குரல் ஆப் மூலம் பெண்ணின் குரலாக மாற்றி, ‘‘உங்கள் கணவரோடு நீங்கள் வாழாதீர்கள். அருண்குமார் உங்களிடமும், உங்கள் குடும்பத்தினருடன் நடிக்கிறார். உங்கள் லைப்பை சேவ் செய்து கொள்ளுங்கள்’’ என கூறி உள்ளார். இதனை நம்பிய தமிழ்ச்செல்வி கணவரை சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து, இருவரும் நெருங்கி பழகி வந்ததை வீடியோ எடுத்த சிவகுரு, அதனை காட்டி தமிழ்செல்வியை மிரட்டி ரூ.25 லட்சம் வரை பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. சிவகுரு, தமிழ்செல்வியுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்தால் மகனை அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறியுள்ளார். இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட சிறுவன் கப்பல் மாலுமியான தனது தந்தையிடம் செல்போனில் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளான்.

விடுமுறையில் கடலூருக்கு வந்து அவர் மகனிடம் நேரில் வந்து விசாரித்த போது, அவனது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு பயந்து போய் இருந்துள்ளான். தனது உறவினர்களுக்கு, தகவல் தெரிவித்ததோடு சிறுவனை கடலூர் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இதை தொடர்ந்து அருண்குமார், எஸ்பியிடம் புகார் கூறியுள்ளார். பின்னர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை அருண்குமார் புகார் அளித்தார். அதில், ‘‘எனது மகனை, மனைவி தமிழ்செல்வியும், சிவாவும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் என்னிடம் அப்பா நீ கப்பலுக்கு போகாதே, நீ கப்பலுக்கு போனா சிவா மாமா தினமும் வீட்டுக்கு வருவார். என்னை அடிப்பார் என்றும் கூறி அழுகிறான். மகனின் கண்முன்னே பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

என் மகனை அடித்து துன்புறுத்தி அவனின் மனநிலையை சீர்குலைத்த எனது மனைவி தமிழ்செல்வி மற்றும் அவரின் கள்ளக்காதலன் தவெகவை சேர்ந்த சிவகுரு மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் சிறுவனின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கள்ளக்காதலன் சிவகுரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே சிறுவனின் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தவெக நிர்வாகி சிவகுருவை கட்சியில் இருந்து நீக்கி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் ராஜ்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: