குண்டுவெடிப்பில் அசாம் ரைபிள்ஸ் வீரர் பலி

 

கோஹிமா: நாகலாந்தின் சுமோகேடிமா மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் செயல்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது அந்த வாகனங்களை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

Related Stories: