கோவை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி வாசுகி. இவர்களது மகள் தர்னிகா (18). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தர்னிகா விடுதி கழிவறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்கலைக்கழக விடுதிக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து மனைவியின் பெற்றோர் கூறும்போது: திடீரென பல்கலைக்கழகத்தில் இருந்து அழைத்து மகள் மயக்கமடைந்து விட்டதாகவும், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினர். நாங்கள் மீண்டும் அதே எண்ணுக்கு அழைத்தபோது விடுதிக்கு வந்து விட்டதாக கூறினர். எதுவாக இருந்தாலும் கூறுங்கள் என்ற போது மகள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விடுதி சிசிடிவியை பார்க்க வேண்டும் என கேட்டபோது வாளியில் தண்ணீர் எடுத்து செல்லும் காட்சியை மட்டும் காட்டினார்கள். வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி காட்சியை காட்டவில்லை. சிசிடிவி வேலை செய்யவில்லை என்றனர். 6.30 மணிக்கு குளிக்கச் சென்ற மகளை மதியம் ஒரு மணி வரை யாரும் தேடவில்லை. வகுப்பிற்கு வரவில்லை என ஆசிரியர்களுக்கும் தெரியாதா? எங்களுக்கு நீதி வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்றனர்.
