×

விவாகரத்து முடிவை அறிவித்துள்ள சூழலில் நடிகையின் ஓரின சேர்க்கை உறவை உறுதிபடுத்திய நடிகர்

 

மும்பை: தனக்கு ஓரின சேர்க்கையாளர் உறவு இருப்பதாக நடிகை அகன்ஷா சமோலா வெளியிட்ட ரகசியத்தை அவரது கணவர் கவுரவ் கன்னா ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நடிகை அகன்ஷா சமோலா, நடிகர் கவுரவ் கன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பு தனக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாகவும், சில பெண்களுடன் நெருக்கமான பாலியல் உறவில் இருந்ததாகவும் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும், தான் பெண்களின் சகவாசத்தை விரும்புவதாகவும், பெண்களிடம் இருந்து கிடைக்கும் ஆறுதல் தனக்கு பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தம்பதியினர் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள சூழலில், கவுரவ் கன்னா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியின் சிறை அதிகாரியான ஃபாரா கான், அகன்ஷாவின் இந்த ஓரின சேர்க்கையாளர் ரகசியம் குறித்து கவுரவ் கன்னாவுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அகன்ஷா கூறுகையில், ‘ஆமாம், அவர் எனது ரகசியத்தை அறிந்து என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவர் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர். எனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு கண்ணியமாக ஏற்றுக்கொண்டார்’ என்றார். இதனை வழிமொழிந்து பேசிய கவுரவ் கன்னா, ‘ஒருவரை நீங்கள் விரும்பினால், அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு’ என்று கூறினார்.

Tags : Mumbai ,Akansha Samola ,Gaurav Khanna ,
× RELATED உஸ்பெகிஸ்தானில் கொலையான மருத்துவ மாணவி உடல் கேரளாவில் தகனம்