×

கரூரில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்

 

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, பதிவுத்துறை, பேரூராட்சிகள் துறை, சமூக நீதித்துறை ஆகிய துறைகளில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வருவாய் பேரிடர் மேலாண்மைத் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பால்வளத் துறை அமைச்சர் மற்றும் துறை சி. விஜயலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி. முத்துக்குமரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vijay ,Karur ,Chief Minister ,C. ,Joseph Vijay ,Karur District Governor's Office ,
× RELATED கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்த அன்று...