×

தூத்துக்குடியில் காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கும் கோரை பாசிகள்.

 

தூத்துக்குடி, ஜூலை 10: தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடலில் இருந்து ஏராளமான கோரை பாசிகள் கரை ஒதுங்கி காணப்படுகின்றன. குறிப்பாக கடற்கரை ஓரப்பகுதிகளில் இந்த பாசிகள் அதிகளவில் குவிந்துள்ளதால், இப்பகுதிக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. தூத்துக்குடி தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, விவேகானந்தர் நகர், திரேஸ்புரம், முத்துநகர் கடற்கரை, புதிய துறைமுகம் கடற்கரை, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த கோரை பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.கரை ஒதுங்கியுள்ள கோரை பாசிகள், சில இடங்களில் கடற்கரையின் இயல்பான தோற்றத்தையும் மாற்றியுள்ளன. கடல் மணல் பரப்பை மறைத்து குப்பைகள் போன்று குவிந்து காணப்படுகின்றன. இதைப் பார்த்த சிலர், இது ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பின் அறிகுறியா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர்.

Tags : Thoothukudi ,Thoothukudi district ,
× RELATED பிறந்து 42 நாட்களேயான ஆண் குழந்தை திடீர் சாவு