×

பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்

 

சென்னை: கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்​த செப்​.27ம் தேதி நடை​பெற்ற தவெக பிர​சா​ர கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டதில் 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை உள்​ளிட்ட உதவி​களை வழங்க முதல்​வர் விஜய் நாளை(10ம் தேதி) கரூருக்கு செல்ல உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்திற்கு வந்து அங்கு நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக கலையரங்க மைதானத்தில் சுமார் 5,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் கோடுடன் அடை​யாள அட்டை வழங்​கப்​படு​கிறது. முதல்வர் வருகையையொட்டி கரூரில் 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி.ஆனந்த் நேற்றிரவு கரூர் வந்து தங்கினார். அவர் இன்று காலை அட்​லஸ் கலை​யரங்​கில் முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

திமுக பதாகை அகற்றம்
முதல்​வர் விஜய் வரு​கையை முன்​னிட்டு கரூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில் பேருந்து நிலை​யம், நிழற்​குடைகள் ஆகிய​வற்​றில் இருந்த திமுக பதாகைகள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. இதைக் கண்​டித்து மாநக​ராட்சி மண்டல குழுத் தலை​வர் எஸ்​.பி.க​னக​ராஜ் தலை​மை​யில் தி​முக கவுன்​சிலர்​கள், மாநக​ராட்​சி ஆணை​யர்​ பிரித்​வி​ராஜிடம்​ புகார்​ மனு அளித்​தனர்​.

Tags : Chief Minister ,Vijay ,Karur ,Chennai ,Thaveka Prasad ,Velusamypuram, Karur ,CBI ,
× RELATED காங். கட்சித் தலைமை அளித்த மனுவை...