×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனையானது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,400க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல நேற்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.

 

Tags : Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளிகளில்...