×

பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி ஏர் கலப்பை, மாடுகளுடன் விவசாயிகள் ஊர்வலம்

 

அரியலூர், ஜூலை 8: அரியலூர் மாவட்டம் பாளையப்பாடி கிராமத்தில் தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாய பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏர் கலப்பை மற்றும் மாடுகளுடன் ஊர்வலமாகச் சென்று கூட்டுறவு வங்கி செயலரிடம் மனு அளித்தனர். அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாளையப்பாடி பேருந்து நிறுத்தமிடத்தில் திரண்ட கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ஜெகநாதன், விவசாய சங்க நிர்வாகிகள் மாரியப்பன், அரசு, ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன்…

பாளையப்பாடி, அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் மண்வெட்டி, ஏர்கலப்பை கழுத்தில் சுமந்துக் கொண்டு, மாடுகளுடன் அங்கிருந்து ஊர்வலமாக முழக்கமிட்டவாறு அரண்மனைக்குறிச்சி கூட்டுறவு வங்கி வரை சென்றனர். அங்கு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கூட்டுறவு வங்கி செயலர் (பொ) அந்தோணிசாமியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

 

Tags : Ariyalur ,Palayappadi ,Ariyalur district ,Cooperative Bank ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...