×

தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் காதலி கழுத்தை அறுத்த வாலிபருக்கு தர்மஅடி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான்கேட்டை அருகே தேங்காய்மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா (22) தர்மபுரியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி (31). இவர், தர்மபுரி தொழில் மையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஷீலாவை திருமணம் செய்ய விரும்பி அவரது வீட்டிற்கு சென்று சின்னசாமி பெண் கேட்டுள்ளார். ஆனால், ஷீலாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஷீலா பேச்சை குறைத்துக்கொண்டு, சின்னசாமியை தவிர்த்து வந்தார். இதனால், ஷலா மீது சின்னசாமி ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டிற்கு வந்த ஷீலா, பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த சின்னசாமி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷீலாவின் கழுத்தை அறுத்தார். தொடர்ந்து ஆத்திரம் தீராமல் ஷீலாவின் அடி வயிற்றில் கத்தியால் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் சின்னசாமியை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்தனர். ஷீலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Dharmaadi ,Dharmapuri ,Sheela ,Thangaimarathupatti ,Adhiyamankettai ,Dharmapuri district ,Chinnaswamy ,Dharmapuri Industrial Centre.… ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...