ஆன்டிகுவா: இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 பொட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் குவித்து டிக்ளே செய்தது.
லஹிரு உதரா சிறப்பாக விளையாடி 188 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 499 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட் எடுத்தார். 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து 142 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. இறுதி நாளான இன்று ஆட்டம் டிராவை நோக்கி செல்லவே அதிகம் வாய்ப்பு உள்ளது.
