×

கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்துள்ள சவூதி.! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?

டெல்லி: கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவூதி அரேபியா குறைத்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றங்கள் தணிந்து வருவதும், உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருவதும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆசிய வாடிக்கையாளர்களுக்கான கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலையை சவூதி அரேபியா குறைத்து உள்ளது.

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான சவூதி அரம்கோ நிறுவனம், ஆசியாவிற்கான ஆகஸ்ட் மாத விநியோகத்திற்காக, தனது முதன்மை அரப் லைட் கச்சா எண்ணெயின் அதிகாரப்பூர்வ விற்பனை விலையை (OSP) ஒரு பீப்பாய்க்கு 11 டாலர் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் ஓமன், துபாய் நாடுகளின் ஒப்பீட்டு விலையை விட மேற்கண்ட விலையானது 1.50 டாலர் தள்ளுபடி விலையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தனது ஆசிய வாடிக்கையாளர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சவூதி அரேபியா செய்துள்ள இந்த மிகப்பெரிய விலை குறைப்பு, உலகளாவிய விநியோகம் அதிகரிப்பு மற்றும் ஆசிய சந்தையில் தங்கள் பங்கை தக்கவைக்கும் நோக்கத்துடன் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சவூதி அரேபியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கினாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாகக் குறைய வாய்ப்பில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், பொதுமக்களுக்கு அந்தப் பலன் கிடைக்க இன்னும் சில வாரங்கள் அல்லது 2 முதல் 3 மாதங்களாகும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Tags : Saudi Arabia ,India ,Delhi ,Middle East ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் 3 முறை மாற்றம்