×

15 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 78,067பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,158பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.39 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 1.93 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 27 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Swami ,Tirupathi Elumalayan Temple ,Darshan ,Temple Undiyal ,
× RELATED நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்...