தெலுங்கானா: ஐதராபாத்தில் உள்ள கௌரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் இன்று (ஜூலை.2) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து நாசமாகியது. அதிர்ஷ்டவசமாக அந்நேரத்தில் பணியாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
