சென்னை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காங்கிரசின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹரிநாராயணன் என்பவர் கைதாகியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காங்கிரசின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹரிநாராயணன் என்பவர் கைதாகியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக முதல்வர் விஜய் அமைத்த ‘சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை’, தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் தான் முதலில் ‘ரெய்டு’ நடத்த வேண்டும் போல் உள்ளது.
எனவே, தனது சொந்தக் கட்சிக்குள்ளும், தனது கூட்டணிக் கட்சிக்குள்ளும் இருக்கும் காமுகர்களை முதவர் விஜய் என்றைக்கு முற்றிலுமாக ஒழிக்கிறாரோ, அப்பொழுதுதான் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
