×

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம்

 

திருச்சி, ஜூலை1: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் முழுமையாக குணமடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைத் துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: \”இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள், புகையிலைப் பழக்கம், மது அருந்துதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, பரம்பரை காரணிகள் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், விழிப்புணர்வு மற்றும் காலமுறை பரிசோதனை மூலம் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து முழுமையாக மீள முடியும்\” என்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பொதுமக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய முழுமையான புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. புற்றுநோயியல், அறுவைச் சிகிச்சை, கதிரியக்கவியல், நோயியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இணைந்து நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர். மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிவதற்கான புற்றுநோய் ரத்த பரிசோதனை (Tumor Marker), கர்ப்பப்பைவாய் பரிசோதனை (Pap Smear), மம்மோகிராம் (Mamogram), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound scan), சி.டி. ஸ்கேன் (CT scan), எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI scan), புற்றுநோயை கண்டறியும் முழு உடல் எம்.ஆர்.ஐ. (MRI Scan) உள்ளிட்ட நவீன பரிசோதனை வசதிகள் ஒரே இடத்தில் உள்ளன. மேலும், பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு கீமோதெரபி, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மற்றும் நோயின் தன்மைக்கேற்ப முழுமையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயர்தர சிகிச்சையை குறைந்த செலவில் பெறும் வகையில் சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கீமோதெரபி மருந்துகளுக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. \”புற்றுநோயை கண்டு அச்சப்பட வேண்டாம், தாமதப்படுத்துவதே ஆபத்து. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால் ஆரோக்கியமான வாழ்க்கையை மீண்டும் பெற முடியும்\” என்று சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைத் துறை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags : Trichy ,Cancer Treatment Department of Dhanalakshmi Srinivasan Medical College and Hospital ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...