வெனிசுலாவில் நிலநடுக்க இடிபாடுகளில் தேடுதல் பணி நீடிப்பு

லா குவைரா: வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்க சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1700க்கும் அதிகமாக உள்ளது.

மீட்பு பணிகளில் அதிகாரிகள் மிக குறைந்த அளவிலேயே மற்றும் மிக மெதுவாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசு அதிகாரிகள் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.  லா குவைராவில் பசியால் வாடிய இடம்பெயர்ந்த மக்களுக்கு, காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் உணவு பொருட்களை வழங்கினார்கள். இயற்கை பேரிடர் ஏற்பட்ட பிறகு முதல் 72 மணி நேரம் மீட்பு பணிகளுக்கு மிக முக்கியமாக காலம் என்று நிவாரண அமைப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் உணவு மற்றும் நீர் கிடைத்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு நீட்டிக்கப்படலாம். உயிர்பிழைத்தவர்களை கண்டறிவதற்கான வாய்ப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை இடிபாடுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே லா குவைராவில் உள்ள பேரிடர் பாதித்த பகுதிகளில் மீண்டும் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories: