×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

பெரம்பலூர், ஜூன் 30: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களில் உடனடித்தீர்வு கண்ட அலுவலர்களை பாராட்டிய மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், அனைத்து அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த மனுக்கள் மீது எவ்வித கால தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 586 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில், சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur Collectorate ,Perambalur ,Public Grievance Redressal Day ,District Revenue ,Officer ,Kannan ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...