×

தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள “கூட்டுறவு வாரம்-2026″ஐ துவக்கி வைத்தார் அமைச்சர் காந்திராஜ்!

 

சென்னை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள “கூட்டுறவு வாரம்-2026”-ஐ கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் இன்று (29.06.2026) கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள “கூட்டுறவு வாரம்-2026”-ஐ கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் இன்று (29.06.2026) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வருகின்ற 29.06.2026 முதல் 06.07.2026 வரை மாநிலம் முழுவதும் “கூட்டுறவு வாரம்” மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்களிடையே கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்க்கும் வகையிலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கூட்டுறவுச் சங்கங்களில் புகுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த எட்டு நாட்கள் “கூட்டுறவு வாரம்-2026” திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS) இந்த கொண்டாட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவின் தொடக்க நாளான இன்று (29.06.2026) கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு அலுவலகங்கள் மற்றும் சங்கங்களில் கூட்டுறவு உறுதிமொழி ஏற்புடன் கூட்டுறவு வாரம்-2026 தொடங்கப்பட்டது. கூட்டுறவு வாரம்-2026-ல், PACS கணினிமயமாக்கல் விளக்கம், வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் கூட்டுறவுச் சாதனைக் கண்காட்சிகள் என நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் மாநிலம் முழு முழுவதும் நடத்தப்படவுள்ளன. அதன்படி, 29.06.2026அன்று தொடக்க விழா மற்றும் கூட்டுறவு உறுதிமொழி நாளாகவும், 30.06.2026 அன்று PACS மாற்றம் மற்றும் டிஜிட்டல் கூட்டுறவு நாளாகவும், 01.07.2026 அன்று விவசாயிகள் பாராட்டு நாளாகவும், 02.07.2026 அன்று தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு நாளாகவும், 03.07.2026 அன்று கூட்டுறவு உரையாடல் நாளாகவும், 04.07.2026 அன்று பசுமை கூட்டுறவு நாளாகவும், 05.07.2026 இளைஞர் கூட்டுறவு நாளாகவும், 06.07.2026 அன்று தேசிய கூட்டுறவு மகோற்சவம் நிகழ்வாகவும் கொண்டாட திட்டமிடப்படுள்ளது.

“கூட்டுறவு வாரம்-2026” மேற்கூறிய கருப்பொருளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், KCC (கிசான் கிரெடிட் கார்டு) விழிப்புணர்வு முகாம்கள். கூட்டுறவுச் சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எளிதில் கடன் பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள், எளிய டிஜிட்டல் வங்கிச் சேவைகள், இலவச இரத்த தான முகாம்கள் மற்றும் கால்நடை மருத்துவ முகாம்கள். கூட்டுறுவு தயாரிப்புகளின் கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.பி.அமுதா.இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திருமதி.ஜி.லதா.இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (கூட்டுறவு ஒன்றியம்) முருகன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

Tags : Minister ,Gandhiraj ,Cooperative Week-2026 ,Tamil Nadu ,Chennai ,Cooperative ,V. Gandhiraj ,Cooperative Department of the Government of Tamil Nadu ,
× RELATED உதவிப் பேராசிரியர் பணியிட தேர்வு...