×

நட்புக்கும், உறவுக்கும் பதவிகளை அள்ளித் தரும் விஜய்; திரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி தந்தாலும் ஆச்சரியமில்லை: ஆர்பி உதயகுமார் வீடியோ பதிவு

 

மதுரை: ‘நட்புக்கும், உறவுக்கும் அரசு பதவிகளை அள்ளித் தரும் முதல்வர் விஜய், மேடம் திரிஷாவிற்கு துணை முதலமைச்சர் பதவி அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: தமிழ்நாட்டை சாராத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்து இருக்கிறது. மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி, தன்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை ‌அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக விஜய் வைத்துக்கொண்டார்.

தமிழகத்தினுடைய 8 கோடி மக்களின் உரிமை காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பெருமை வாய்ந்த இந்த பதவிக்கு, தமிழகத்தை சேர்ந்தவர்கள் எவருமில்லையா? விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள், தன் படத்தில் நடிப்பவருக்கு, மேனேஜர்களான ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி, ராதன்பண்டிட், வெங்கட் நாராயணா இப்படி எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய், மேடம் திரிஷாவிற்குக் கூட துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Trisha ,Orbi Udayakumar ,Madurai ,Former Minister ,Arbi Udayakumar ,Deputy Chief Minister ,Madame ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக...